உலகம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு!

ஸ்லோவாகியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

DIN

ஸ்லோவாகியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

பிரதமர் ராபர்ட் ஃபிகோ, புதன்கிழமையன்று அரசாங்கக் கூட்டத்திற்குப் பிறகு பொதுமக்களுடன் உரையாடியபோது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், அவர் படுகாயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

ராபர்ட் ஃபிகோ மீது பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அதில் குறைந்தபட்சம் ஒரு குண்டு அவரைத் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பாதுகாவலர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர், தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிராட்டிஸ்லாவாவிலிருந்து வடகிழக்கே 180 கிமீ தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்: துரை வைகோ எம்.பி

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்

பூண்டி ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரி ஆழப்படுத்தும் பணி

மகாராஜபுரம் சுடலைமாட சாமி கோயில் கும்பாபிஷேக விழா

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

SCROLL FOR NEXT