ஹார்பின்னில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விளாதிமீர் புதின் AFP
உலகம்

கார்கிவை கைப்பற்றும் எண்ணமில்லை: ரஷிய பிரதமர்!

கார்கிவ் நகரை கைப்பற்ற எண்ணமில்லை - புதின் திட்டவட்டம்

DIN

ரஷிய பிரதமர் விளாதிமீர் புதின் வெள்ளிக்கிழமை தற்போதைக்கு கார்கிவ் நகரை கைப்பற்றும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் ரஷிய நாட்டின் பெல்கோரோட் பிராந்தியத்தின் மீது கார்கிவ்வில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்நகரை பாதுகாப்பு மண்டலமாக ரஷிய படைகள் நிறுவியுள்ளன.

சீனா பயணத்தின் முடிவில் ஹார்பின் நகரில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விளாதிமீர் புதினிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

கடுமையாக தாக்கப்பட்ட கார்கிவ் நகரை வியாழக்கிழமை உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஸெலென்ஸ்கி பார்வையிட்டார். அங்கு நிலைமை கட்டுபாட்டுக்குள் வந்ததாக அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் ரஷியாவின் பலத்த தாக்குதலை கார்கிவ் எதிர்கொண்டது.

கார்கிவ்வில் இருந்து தாக்குதல் நடத்தப்படுவதால் ரஷியாவின் பாதுகாப்பு பொருட்டு அங்கு பாதுகாப்பு வளையம் நிறுவுவது தேவையானது என புதின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ரஷிய பிரதமரும் தற்போதைய தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பு வகிப்பவருமான த்மித்ரி மெட்வடேவ், ஸெலென்ஸ்கியின் பார்வையிடல் என்பது கார்கிவ்வுக்கு அவர் விடைகொடுக்கும் நிகழ்வு என தெரிவித்துள்ளார்.

ரஷிய தலைவர்கள் கார்கிவ் நகரை மீண்டும் மீண்டும் ரஷியாவின் நகரம் என்றே குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போதைக்கு மட்டுமாக இருந்தாலும் புதின் இவ்வாறு திட்டமில்லை என தெரிவிப்பது முதல்முறை என தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT