முகப்பு
உலகம்

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்: 23 பேர் பலி!

காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் 23 பேர் உயிரிழப்பு

Updated On : 23 மே, 2024 at 4:23 AM
ஜெனின் நகரில் இஸ்ரேல் தாக்குதல்
பகிர்:

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில் குறைந்தது 23 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நள்ளிரவு முதல் காலை வரை காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதலை நடத்தியதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேலிய விமானம் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஆறு பேர் பலியானதாகவும் ஆறு பேர் காயமுற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்த மக்களின் நகரமான அல்-ஜவைதாவிலும் குண்டுகள் வீசப்பட்டதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

நஸீரத் அகதிகள் முகாம், தெற்கு நகரமான அல்-சைத்துன் ஆகிய இடங்களிலும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

ராபாவில் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலில் குறைந்தது 5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும் 7 பேர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு ராபா நோக்கி இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை விரிவாக்கி வருவதாகவும் எகிப்து எல்லைக்கு அருகில் உள்ள பிலாடெல்பியா காரிடருக்கு இணையாக ராணுவம் முன்னேறுவதாக பாலஸ்தீன வட்டாரங்கள் ஸின்ஹுவாவிடம் தெரிவித்துள்ளன.

போதிய வரத்து மற்றும் பாதுகாப்பு இல்லாததால் பாலஸ்தீனத்துக்கான ஐநா முகமை நிவாரண உதவிகளை நிறுத்தி வைத்துள்ளதாக அதன் அதிகாரபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →