கிழக்கு இந்தோனேசிய பிராந்தியமான வடக்கு பப்புவாவில் கடந்த வாரம் பெய்த மழையின் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அர்ஃபாக் மலைப் பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவில் சிக்கிய ஒருவர் மீட்கப்பட்டதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிகளில் கனமான உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் மீட்கப்பட்டதால் மீட்புப் பணிகள் நிறைவுற்றதாகவும் இருந்தபோதும் அடுத்த சில நாள்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் அர்ஃபாக் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் தொடர்வதாக மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
மீட்புப் பணியாளர்கள் தயாராக இருக்கவும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறும் இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.