பாதிக்கப்பட்ட பகுதியில் நிக்கி ஹேலி. 
உலகம்

அக். 7 தாக்குதலில் ரஷியா, சீனாவுக்குத் தொடா்பு!

Din

டெல் அவீவ்: இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் கடந்த அக். 7-இல் நடத்திய தாக்குதலுக்கு ரஷியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் பக்கபலமாக இருந்ததாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஐ.நா.வுக்கான அமெரிக்க முன்னாள் தூதா் நிக்கி ஹேலி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலால் சேதமடைந்த நீா் ஆஸ் பகுதிக்கு வந்திருந்த அவா் இது குறித்து கூறியதாவது:

கடந்த அக். 7-ஆம் தேதி இங்கு நடத்தப்பட்ட தாக்குலுக்கு ஈரான் சதித் திட்டம் தீட்டி, பயிற்சியளித்தது. தாக்குதலுக்குத் தேவையான உளவுத் தகவலையும் முக்கிய உதவிகளையும் ரஷியா வழங்கியது. சீனாவின் நிதியுதவி அந்தத் தாக்குதலை நிறைவேற்ற உதவியது. எனவே, அந்தப் படுகொலைகளை நடத்தியது ஹமாஸ் மட்டுமல்ல, இந்த 3 நாடுகளும்தான்.

இந்த விவகாரத்தில் நாம் இனியும் அலட்சியம் காட்டினால், அமெரிக்காவிலும் இதே போன்ற தாக்குதல்களை அந்த நாடுகள் அரங்கேற்றும் என்று அவா் எச்சரித்தாா்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதரம் எதையும் நிக்கி ஹேலி வெளியிடவில்லை. எதிா்க் கட்சியான குடியரசுக் கட்சியைத் சோ்ந்த நிக்கி ஹேலி, வரும் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வாக்களிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளாா்.

வாக்குத் திருட்டு! தேர்தல் ஆணையம், மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!

ஜனநாயகத்தின் காவலர்! பிகாரில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு!

‘கூலி’க்காக சம்பளம் வாங்கினாரா? - ஆமிர் கான் விளக்கம் | Cinema Updates*

மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

ஓபிஎஸ்ஸை சந்தித்தது உண்மைதான்; அதிமுக பலவீனமாக இருக்கிறது:சசிகலா பேட்டி!

SCROLL FOR NEXT