கோப்புப் படம் AP
உலகம்

எண்ணெய் ஏற்றுமதியைக் குறைக்கும் இராக்!

இராக் தனது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை குறைத்துள்ளது.

DIN

இராக் தனது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைக் குறைத்துள்ளதாக ஈரானின் எண்ணெய் உற்பத்தித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ள இராக், கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நாளொன்றுக்கு 3.3 மில்லியன் (33 லட்சம்) பேரல்கள் அளவுக்கு குறைத்து, உள்நாட்டு பயன்பாட்டையும் குறைத்திருப்பதாக ஈராக் எண்ணெய் உற்பத்தித் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இராக் அரசின் அதிகாரப்பூர்வத் தகவலின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி அளவு ஒரு நாளைக்கு சராசரியாக 3.43 மில்லியன் பேரல்கள் இருந்துள்ளது.

பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பில் (ஓபிஈசி) இராக்கின் குறிப்பிட்ட ஒதுக்கீட்டிற்குள் உற்பத்தி இருப்பதை உறுதிசெய்யவும், முந்தைய மாதங்களில் ஒதுக்கீட்டை மீறி ஏற்றுமதி செய்யப்பட்டதை ஈடுகட்டவும் இந்த குறைப்பு வரும் மாதங்களில் தொடரும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறைப்பு உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் சமநிலை மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த மேற்கொள்ளப்படுவதாக இராக் தெரிவித்துள்ளது.

இராக்கின் பொருளாதாரம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ளது. இது நாட்டின் வருவாயில் 90 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

SCROLL FOR NEXT