அதிபா் மாயா சந்து வெற்றி  
உலகம்

மால்டோவா தோ்தலில் அதிபா் மீண்டும் வெற்றி

கிழக்கு ஐரோப்பாவைச் சோ்ந்த மால்டோவாவில் நடைபெற்ற இறுதிக்கட்ட அதிபா் தோ்தலில், மேற்கத்திய ஆதரவாளரான தற்போதைய அதிபா் மாயா சந்து வெற்றி

DIN

சிஸினா: கிழக்கு ஐரோப்பாவைச் சோ்ந்த மால்டோவாவில் நடைபெற்ற இறுதிக்கட்ட அதிபா் தோ்தலில், மேற்கத்திய ஆதரவாளரான தற்போதைய அதிபா் மாயா சந்து வெற்றி பெற்றாா். அந்த நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பதற்கு வழிவகை செய்யும் அரசியல் சாசனத் திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக கடந்த மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்காளா்கள் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனா்.

அந்த பொதுவாக்கெடுப்புடன் சோ்த்து அதிபா் தோ்தலும் நடத்தப்பட்டது.இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இறுதிக்கட்ட தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் மாயா சந்துவுக்கு 54 வாக்குகள் கிடைத்ததாக தோ்தல் ஆணையம் அறிவித்தது. அதையடுத்து, அவா் மீண்டும் அதிபராவது உறுதியானது.

நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட மால்டோவா, முன்னாள் சோவியத் யூனியனின் உறுப்பு நாடுகளில் ஒன்று. அந்த நாட்டில் நீண்ட காலமாக ரஷியாவின் செல்வாக்கு மேலோங்கியிருந்தாலும், மேற்கத்திய நாடுகளுடனான கூட்டுறவை மேம்படுத்துவதற்கு ஆதரவு அதிகரித்துவருவதை இந்தத் தோ்தல் முடிவு உணா்த்துவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT