பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் குறிவைத்து குண்டுவெடிப்பு! ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும்...(விடியோ)
பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் குறிவைத்து குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் உயிர் பலி அதிகரித்திருக்கும்.
பாகிஸ்தான் நாட்டின் பலோசிஸ்தான் மாகாணம், குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று அந்நாட்டு ராணுவ வீரர்களைக் குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
குவெட்டா ரயில் நிலைய குண்டுவெடிப்பில் 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உள்பட 24 பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர்.
குவெட்டா ரயில்நிலையத்திலிருந்து பெஷாவருக்கு ஒரு பயணிகள் ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில், அங்கு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. ஒருவேளை, சற்று முன்னதாக குண்டுவெடித்திருந்தால் பலி எண்ணிக்கைக் கடுமையாக அதிகரித்திருக்கும்.
அதேவேளையில், சரியாக காலை 9 மணிக்கு குவெட்ட ரயில் நிலையத்துக்கு ஒரு ரயில் வந்துகொண்டிருந்தது. அது வருவதற்குள் குண்டு வெடித்துவிட்டதால் உயிர் பலி அதிகரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. வெளிநாடுகளில் வேலை தேடத் தொடங்கிய அமெரிக்கர்கள்!
பலோசிஸ்தான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பு இந்த குண்டுவெடிப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது. ரயில் நிலையத்துக்கு வரும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் குறி வைத்து எங்கள் தற்கொலைப் படை வீரர் தாக்குதல் நடத்தியிருப்பாகவும் கூறியிருக்கிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த ஏராளமான ராணுவ வீரர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.