முன்னாள் பிரதமர் நவீன் ராம்கூலம் AP
உலகம்

மொரீஷியஸ் தேர்தல் முடிவுகள்: நவீன் ராம்கூலம் பிரதமராகிறார்!

முன்னாள் பிரதமர் நவீன் ராம்கூலம் தலைமையிலான கூட்டணி வெற்றி.

DIN

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு தேசமான மொரீஷியஸில், ஞாயிற்றுகிழமை(நவ. 10) தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 70 உறுப்பினர்களில் 62 பேர் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில், இன்று(நவ. 11) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதில் கடந்த 2 முறை நடைபெற்ற பொதுத்தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பிரதமர் பிரவீந்த் குமார் ஜுக்நாத் தலைமையிலான ஆயுதப்படை சமூகவுடைமை இயக்கம்(எம்எஸ்எம்) இம்முறை பெரும்பான்மை இடங்களில் தோல்வியடைந்துள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் தலைமையிலான தொழிலாளர் கட்சியான - பார்டி டிராவைலிஸ்ட்(பிடி‘ஆர்’) மற்றும் மொரீஷியன் ஆயுதப்படை இயக்கம்(எம்எம்எம்), நோவியாவ் ஜனநாயகத்தினர் கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.

டாக்டர் நவீன் ராம்கூலம், கடந்த 2005 முதல் 2014ஆம் ஆண்டு வரை மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

SCROLL FOR NEXT