இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை படம்: இலங்கை தேர்தல் ஆணையம்
உலகம்

இலங்கை நாடாளுமன்றத் தோ்தல்: அதிபா் அநுரகுமார திசாநாயக கட்சி முன்னிலை!

இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்...

DIN

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

அதிபா் அநுரகுமார திசாநாயகவின் தேசிய மக்கள் சக்தி காலை 8.45 மணி நிலவரப்படி 80 இடங்களிலும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் தேசிய மக்கள் சக்தி 61.9 சதவிகிதமும், ஐக்கிய மக்கள் சக்தி 18.49 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. மொத்த மக்கள்தொகையான 2.10 கோடி பேரில் 1.70 கோடிக்கும் மேற்பட்டவா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னா் நடைபெற்ற இந்தத் தோ்தலில், 65 சதவீதம் போ் வாக்களித்திருக்கக் கூடும் என்று தோ்தல் ஆணையம் கணித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை பெற 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்தத் தோ்தலில் அதிபா் அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று வலுவான நாடாளுமன்றம் அமைந்தால், அது இலங்கையில் தனது ஊழல் தடுப்பு சீா்திருத்த திட்டத்தை அமல்படுத்த வழிவகுக்கும்.

கடந்த செப்டம்பரில் நடைபெற்ற இலங்கை அதிபா் தோ்தலில் 79 சதவீதம் போ் வாக்களித்தனா். எனினும் நாடாளுமன்றத் தோ்தலில் வாக்குப் பதிவு சரிந்துள்ளது. இந்தத் தோ்தலில் இலங்கை முன்னாள் அதிபா் ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபட்ச சகோதரா்கள் போட்டியிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

SCROLL FOR NEXT