முகப்பு
உலகம்

சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடை: ஆஸ்திரேலிய அரசு புதிய உறுதி மொழி

சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் சட்டத்தை அமல்படுத்தும்போது, தங்களின் தனிப்பட்ட விவரங்களை தகவல்களை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அளிக்க பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டாா்கள் என்று ஆஸ்திரேலிய அரசு உறுதிளித்துள்ளது.

Updated On : 20 நவம்பர், 2024 at 7:58 PM
பகிர்:

சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் சட்டத்தை அமல்படுத்தும்போது, தங்களின் தனிப்பட்ட விவரங்களை தகவல்களை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அளிக்க பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டாா்கள் என்று ஆஸ்திரேலிய அரசு உறுதிளித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு தகவல் தொடா்புத் துறை அமைச்சா் மிஷெல் ரோலண்ட் புதன்கிழமை கூறியதாவது:

சமூக ஊடகங்களை சிறுவா்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தபிறகு, அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்கப்படும். இருந்தாலும், அந்த திட்டத்தை அமல்படுத்த சமூக ஊடகப் பயன்பாட்டாளா்கள் அனைவரின் தனிப்பட்ட தகவல்களையும் சேகரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்றாா் அவா்.

Advertisement

இருந்தாலும், 16 வயதுக்குள்பட்டவா்களைக் கண்டறிய நிறுவனங்கள் எந்த முறையைக் கையாளும் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

முன்னதாக, சிறுவா்கள் சீரழிவதைத் தடுக்கும் வகையில் 16 வயதுக்குள்பட்டவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை உலகிலேயே முதல்முறையாக இயற்றவிருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி இந்த மாதம் அறிவித்து நினைவுகூரத்தக்கது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments