இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது பதிவான 64 கோடி வாக்குகள் ஒரே நாளில் எண்ணி முடிக்கப்பட்டுவிட்டது, ஆனால் கலிஃபோர்னியாவில் இன்னமும் வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கிறது என்று அமெரிக்க தேர்தல் முறையை விமரிசித்திருக்கிறார் தொழிலதிபர் எலான் மஸ்க்.
டெஸ்லா நிறுவன தொழிலதிபர் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் இது பற்றிய இடுகையை பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், நம்முடைய முறை உடைந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. சொல்லப் போனால்... எதற்காக வழக்குரைஞர்கள் போராட்டம்?
அதாவது, எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் ஒரு பதிவுக்கு பதிலளித்து எலான் மஸ்க் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், இந்தியாவில் 64 கோடி வாக்குகள் ஒரு நாளில் எண்ணப்பட்டுவிட்டன.
அர்ஜென்டினாவில் 2.7 கோடி வாக்குகள் 6 மணி நேரத்தில் எண்ணப்பட்டுள்ளன.
லேக் கவுண்டி, கலிஃபோர்னியாவில். வெறும் 25 ஆயிரம் வாக்குகள் 19 நாள்களுக்கும் மேலாக எண்ணப்பட்டு வருகிறது என்று பதிவிடப்பட்டிருக்கும் எக்ஸ் பதிவுக்குத்தான் எலான் மஸ்க் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இந்தியாவில்..
இந்தியாவில், மக்களவைத் தேர்தல் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதில் 64 கோடி பேர் வாக்களித்திருந்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் பதிவான வாக்குகள் ஒரு நாளில் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமானது 2000-ஆவது ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க.. 2023ல் நாள்தோறும் 140 பெண்கள் கொலை! அதுவும் குடும்பத்தினரால்!!
அமெரிக்காவில்..
வழக்கமாக அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கலிஃபோர்னியா போன்ற மாகாணங்களில் ஒரு வார காலம் நடைபெறும். நவம்பர் 5ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், அதிக வாக்காளர்களைக் கொண்ட கலிஃபோர்னியாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தேர்தல் முடிந்து அடுத்த நாளே வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி, இன்னமும் 3 லட்சம் வாக்குகள் எண்ணப்படவிருக்கிறது. இதற்குத்தான், எலான் மஸ்க் போன்றவர்கள் கடுமையான விமரிசனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
ஏன் இந்த தாமதம்?
கலிஃபோர்னியாவில் அதிகமாக அஞ்சல் வாக்குகள் பதிவாகும். எனவே, வாக்குகளில் இருக்கும் கையெழுத்துகளை சரிபார்ப்பது, அதனை வரிசைப்படுத்துவது என அனைத்தும் முடிந்தபிறகே எண்ணிக்கை தொடங்கும்.
இந்தியாவில் தேர்தல் ஆணையம், ஒட்டுமொத்த தேர்தல் பணிகளையும் கண்காணிக்கும் நிலையில், அமெரிக்காவில், மாகாண மற்றும் உள்ளூர் தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பில் தேர்தல் நடைபெறும். இதற்கு தனித்தனி சட்டம், மனிதவளம் பயன்படுத்தப்படுவதும், தேர்தல் பணியை மேலும் தாமதமாக்குகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.