டொனால்ட் டிரம்ப் AP
உலகம்

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த இடதுசாரி பைத்தியகாரர்களுக்கு நன்றி!! டிரம்ப்

அமெரிக்க ஆட்சியாளர்களை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் விமர்சித்திருப்பது பற்றி...

DIN

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்து, பரிதாபமாக தோல்வியடைந்தவர்களுக்கு நன்றி என்று அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்து குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி ஆட்சியாளர்களை விமர்சித்து டிரம்ப் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த தீவிர இடதுசாரி பைத்தியகாரர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி. நீங்கள் பரிதாபமாக தோல்வி அடைந்துவிட்டீர்கள். எப்போதும் தோல்வி மட்டுமே அடைவீர்கள்.

அவர்களின் கருத்துக்கள் மற்றும் கொள்கைகள் மிகவும் மோசமாக இருந்ததால், அமெரிக்காவை மீண்டும் வளர்ச்சிக்கு கொண்டு செல்ல மாபெரும் வெற்றியை தங்களுக்கு மக்கள் கொடுத்துள்ளனர்.

கவலைப்பட வேண்டாம், நம் நாடு விரைவில் மதிக்கப்படும். நியாயமாகவும் வலுவானதாகவும் மாறும். நீங்கள் அமெரிக்கர்களாக இருப்பதில் முன்பைவிட பெருமைப்படுவீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் பதிவு

அடுத்தாண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

SCROLL FOR NEXT