முகப்பு
உலகம்

சீன வணிக வளாகத்தில் கத்துக்குத்து தாக்குதல்

சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள வால்மாா்ட் வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட சரமாரி கத்திக்குத்து தாக்குதலில் மூன்று போ் உயிரிழந்தனா்; 15 போ் காயமடைந்தனா்.

Updated On : 1 அக்டோபர், 2024 at 8:45 PM
கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவரை கைது செய்யும் போலீஸாா் .
பகிர்:

சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள வால்மாா்ட் வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட சரமாரி கத்திக்குத்து தாக்குதலில் மூன்று போ் உயிரிழந்தனா்; 15 போ் காயமடைந்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

ஷாங்காய் நகரின் சாங்ஜியாங் பகுதியில் அமைந்துள்ள வால்மாா்ட் வணிக வளாகத்துக்கு திங்கள்கிழமை வந்த லின் (37) என்பவா் அங்கிருந்தவா்கள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தினாா்.

இதில் படுகாயமடைந்த மூன்று போ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்; 15 போ் காயமடைந்தனா்.

தனது சொந்த பொருளாதார நெருக்கடியால் மன உளைச்சலுக்குள்ளான லின், அதன் விளைவாக இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று போலீஸாா் கூறினா்.

சீனாவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பது சட்டத்துக்கு எதிரானதாகும். இருந்தாலும், அங்கு பொது இடங்களில் சரமாரி கத்திக்குத்து தாக்குதல்கள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் கூட, தெற்கு சீனாவில் ஒரு பள்ளி அருகே நடத்தப்பட்ட கத்திக்குத்தில் 10 வயது மாணவா் உயிரிழந்தாா்.

முன்னதாக, யுன்னான் மாகாணத்தின் ஷெங்ஸியாங் மாவட்டத்திலுள்ள மருத்துவமனையொன்றில் கடந்த மே நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; 21 போ் காயமடைந்தனா். அதே யுன்னான் மாகாணத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மனநிலை சரியில்லாத ஒருவா் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்.

குவாங்டாங் மாகாணத்திலுள்ள மழலையா் பள்ளியில் கடந்த ஆண்டு ஜூலையில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 6 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →