காஸாவில் உடமைகளை இழந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் AP
உலகம்

காஸா குடியிருப்புகளில் தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம்

காஸாவின் பெய்ட் லாஹியா குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது.

DIN

காஸாவின் பெய்ட் லாஹியா குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படைப் பிரிவினருக்கும் இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இதனிடையே வடக்கு காஸாவின் பெய்ட் லாஹியா நகரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நேற்று நள்ளிரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் இதுவரை 87 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும், 40-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேதமடைந்த கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளோர் பலர், இன்னும் மீட்கப்படாமல் இருப்பதாகவும் காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளால் அப்பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளதால், அவசர ஊர்தி வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க | நெதன்யாகு எச்சரிக்கை... அடுத்த தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்!

காஸாவில் இந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது சனிக்கிழமை நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல்களில்தான்.

இந்நிலையில், பெய்ட் லாஹியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமைதி செயல்முறைக்கான ஐ.நா ஒருங்கிணைப்பாளர் தோர் வென்னஸ்லேன்ட் தெரிவித்ததாவது,

''பல வாரங்களாக தீவிரப்படுத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கையால், ஏராளமான மக்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன் மட்டுமல்லாமல், வடக்குப் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT