உக்ரைனை எதிர்த்துப் போராட 10,000 வட கொரிய வீரர்கள் அனுப்பி வைப்பு!
வட கொரியா தன் நெருங்கிய நட்பு நாடான ரஷியாவுக்கு ராணுவ உதவி...
உக்ரைன் மீது ரஷியா ராணுவ தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. போர் நிறுத்தத்துக்கு இருதரப்பும் முழு ஆதரவு தெரிவிக்காததால், உக்ரைனில் சண்டை நீடிக்கிறது.
இந்த நிலையில், உக்ரைனை எதிர்த்துப் போராட வட கொரியாவிலிருந்து 10,000 வீரர்கள் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பெண்டகன் இன்று(அக். 28) தெரிவித்துள்ளது. வரும் வாரங்களில், உக்ரைனில் சண்டையை தீவிரப்படுத்த ரஷியா ஆயத்தமாகியிருப்பதாகவும், இதற்காக வட கொரியா தன் நெருங்கிய நட்பு நாடான ரஷியாவுக்கு ராணுவ உதவிகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.