கோப்புப்படம் ANI
உலகம்

தொழுகை நேரத்தில் துர்கா பூஜை வழிபாட்டுக்கு கட்டுப்பாடு: வங்கதேச அரசு

வங்கதேசத்தில் துர்கா பூஜை நிகழ்வுக்கு இடைக்கால அரசு கட்டுப்பாடு விதித்திருப்பது பற்றி...

DIN

துர்கா பூஜை வழிபாட்டு மேற்கொள்ளும் ஹிந்துக்கள், தொழுகை நேரத்தில் பாட்டு போடுவது உள்ளிட்ட செயல்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு வங்கதேச இடைக்கால அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இசைக் கருவிகள் மற்றும் ஒலி எழுப்பும் சாதனங்களை அணைத்து வைக்க பூஜை நடத்தும் குழுக்கள் ஏற்றுக் கொண்டதாக உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) எம்.டி ஜஹாங்கிர் ஆலம் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், தொழுகை தொடங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னதாகவே ஒலி எழுப்பும் சாதனங்கள் அணைத்து வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

துர்கா நிகழ்வுக்கு பாதுகாப்பு

இந்தியாவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் துர்கா பூஜையை வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்களும் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.

தற்போது வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைக்கப்பட்டு, ராணுவ உதவியுடன் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில், சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதும், ஹிந்து கோவில்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனிடையே, தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு இடங்களில் 32,666 சிலை வைத்து பந்தல்கள் அமைக்கப்பட்டு துர்கா பூஜை கொண்டாடப்படவுள்ளதாக ஜஹாங்கிர் ஆலம் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், பூஜை நடைபெறும் இடங்களுக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், தடையின்றி விழா நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT