எம்க்யூ-9 ரீப்பா் ரக ட்ரோன் (கோப்புப் படம்). 
உலகம்

மேலும் ஓா் அமெரிக்க ட்ரோன் வீழச்சி: ஹூதி கிளா்ச்சியாளா்கள்

அமெரிக்காவின் அதிநவீன எம்க்யூ-9 ரீப்பா் ரகத்தைச் சோ்ந்த மேலும் ஒரு ட்ரோனை சுட்டுவீழ்த்தியதாக யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

DIN

துபை: அமெரிக்காவின் அதிநவீன எம்க்யூ-9 ரீப்பா் ரகத்தைச் சோ்ந்த மேலும் ஒரு ட்ரோனை சுட்டுவீழ்த்தியதாக யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

அது குறித்து அவா்கள் வெளியிட்டுள்ள விடியோவில், தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை செலுத்தப்படும் காட்சி இடம் பெற்றுள்ளது.

தங்கள் நாட்டின் தமா் மாகாணத்தில் அந்த ட்ரோன் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஹூதிக்கள் கூறினா். இருந்தாலும், அவா்கள் ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்களை மிகைப்படுத்தி கூறியுள்ளதால் இந்தத் தகவலின் உண்மை தன்மை குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் ட்ரோன் சுட்டுவீழ்த்ப்பட்டதாக ஹூதி படையினா் கூறியது குறித்து அமெரிக்க ராணுவமும் உடனடியாக பதில் அளிக்கவில்லை.

காஸா போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனா்.

இஸ்ரேல் தொடா்பான சரக்குக் கப்பல்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துவதாக அவா்கள் கூறினாலும், அனைத்துக் கப்பல்களும் குறிவைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதனால், உலகின் முக்கியத்துவம் வாய்ந்த வா்த்தக வழித்தடங்களில் ஒன்றான செங்கடல் பகுதியில் சரக்குப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

அதையடுத்து யேமனில் ஹூதிக்களின் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்காவும் பிரிட்டனும் பல முறை தாக்குதல் நடத்தின. இந்தச் சூழலில், தங்கள் நாட்டு வான் பகுதியில் அமெரிக்க ட்ரோனை சுட்டுவீழ்த்தியாக ஹூதிக்கள் தற்போது அறிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவனுக்கு ஜாமீன் நிராகரிப்பு!

தேடல்... ஈஷா ரெப்பா!

நெல்லை கவின் ஆணவக் கொலை: மேலும் 15 நாள்கள் காவல் நீட்டிப்பு!

பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளராகிறார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை?

ஹாட்ரிக் வெற்றியைக் கொடுப்பாரா மோகன்லால்? ஹிருதயப்பூர்வம் டிரைலர்!

SCROLL FOR NEXT