டொனால்ட் டிரம்ப் 
உலகம்

நான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறேன்: டொனால்ட் டிரம்ப்!

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு தான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

DIN

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு தான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே டிரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 15) அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்துக்கு வெளியே இரண்டு நபர்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து டிரம்ப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அந்த நபர்கள் டிரம்ப் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்போது, மைதானத்துக்கு வெளியே இரண்டு நபர்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக டிரம்ப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நான் இருந்த இடத்திற்கு அருகாமையில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதுதொடர்பான வதந்திகள் பரவுவதற்கு முன்னர் நான் உங்களுக்கு இதனைக் கூற விரும்புகிறேன். நான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கின்றேன்.

எனது வேகத்தை எதுவும் குறைக்காது. நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகள்விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதில் மகிழ்வதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ஆயுதம் மீட்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

கூடலூரில் பூக்கத் தொடங்கிய குறிஞ்சி மலர்கள்!

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

SCROLL FOR NEXT