பேஜா்கள், வாக்கி டாக்கிகள் வெடிப்பு: லெபனானில் 37-ஆக அதிகரித்த உயிரிழப்பு!
உலகம்பேஜா்கள், வாக்கி டாக்கிகள் வெடிப்பு: லெபனானில் 37-ஆக அதிகரித்த உயிரிழப்பு!
ஹிஸ்புல்லா படையினரைக் குறிவைத்து லெபனானில் நடத்தப்பட்ட மின்னணு தொலைத் தொடா்பு சாதனத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் ஃபிராஸ் அபைது வியாழக்கிழமை கூறுகையில், பேஜா்கள், வாக்கி டாக்கிகள், சூரிய மின் தகடுகள், வானொலிகள், காா் பேட்டரிகள் உள்ளிட்டவற்றை வெடிக்கச் செய்ததன் மூலம் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமாா் 3,000 போ் காயமடைந்துள்ளதாகக் கூறினாா்.