உலகம்

பாகிஸ்தான்: போலியோ பாதிப்பு 22-ஆக அதிகரிப்பு

Din

பாகிஸ்தானில் மேலும் ஒரு குழந்தைக்கு போலியா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டு மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்ட குழைந்தைகளின் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.

அந்த நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 30 மாத ஆண் குழந்தைக்கு டபிள்யுபிவி-1 வகை போலியோ தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து இந்த நிலை ஏற்பட்டது.

இந்த ஆண்டு போலியோ உறுதி செய்யப்பட்ட 22 குழந்தைகளில், பயங்கரவாத பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் 15 போ் என்று அதிகாரிகள் கூறினா்.

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின் தெஹ்ரீக்-இ-தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன.

போலியோ தடுப்பு மருந்துகள் முஸ்லிம் குழந்தைகளின் இனப்பெருக்கத் திறனைக் குறைப்பதற்கான மேற்கத்திய நாடுகளின் சதி என்று அந்த அமைப்புகள் நம்புகின்றன.

இதன் காரணமாக, போலியோ தடுப்பு மருந்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமானவா்கள் உயிரிழந்தும் வருகின்ரனா்.

குழந்தைகளை நிரந்த ஊனமாகும், சில நேரங்களில் உயிரையே பறிக் கூடிய போலியோ நோய் உலகின் மற்ற பகுதிகளில் நிரந்தரமாக ஒழிக்கப்பட்டாலும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டும் அது இன்னும் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தெ.ஆப்பிரிக்க தொடர்: இங்கிலாந்து அணியில் சோனி பேக்கருக்கு முதல்முறை வாய்ப்பு!

மூவர்ண சேலையில்... ஸ்ரவந்தி சொக்கராபு!

செல்லம்... அனைரா குப்தா!

டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரை! கிளிண்டன் பேச்சால் குழப்பம்!

ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ் லாபம் 85% உயர்வு!

SCROLL FOR NEXT