ஐ.நா. அவையில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலன்ஸ்கி AP
உலகம்

நோபல் கனவுடன் வலம்வரும் அமைதி வியாபாரிகள்! யாரைச் சொல்கிறார் ஸெலன்ஸ்கி?

நோபல் பரிசுக்காக மட்டுமே சிலர் அமைதியை விரும்புவதாக உக்ரைன் அதிபர் மறைமுக விமர்சனம்

DIN

ஐ.நா. அவையில் உரையாற்றிய வொலோதிமீா் ஸெலன்ஸ்கி, உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த விரும்பும் தலைவர்களின் பெயரைக் குறிப்பிடாமல் கருத்து தெரிவித்தார்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தனது பத்து அம்ச திட்டத்துக்கு அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் ஆதரவு தரவேண்டும் என்று அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கி நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.வின் 76 ஆவது கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தார். அப்போது, உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த விரும்பும் தலைவர்களின் பெயரைக் குறிப்பிடாமல் சில கருத்துகளையும் தெரிவித்தார்.

வொலோதிமீா் ஸெலன்ஸ்கி கூறியதாவது ``உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்று நினைப்பவர்களைவிட, அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்காகவே அமைதி வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர். ரஷிய அதிபர் புதினுக்கு ஏதேனும் பரிசு வழங்கப்பட்டால், அதில் துன்பங்களும் பேரழிவுகள் மட்டுமே இருக்கும்.

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி

சிலர் கூறும் மாற்று வழிகள் உக்ரேனிய மக்களின் நலன்களையும் பாதுகாப்பு மற்றும் துன்பங்களையும் புறக்கணிப்பது மட்டுமின்றி, எங்கள் மீதான போரைத் தொடரவும், பல நாடுகளை கட்டுக்குள் கொண்டுவர, உலகுக்கு புதின் அழுத்தம் அளிக்கக் கூடும்’’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தங்களுடன் போரில் ஈடுபட்ட நாடுகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள், உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான செயல்திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.

உக்ரைனின் அமைதி செயல்திட்டத்திற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்பட பல உலக தலைவர்களையும் ஸெலன்ஸ்கி சந்தித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த ஸெலன்ஸ்கி
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் ஸெலன்ஸ்கி

ஐநா தலைமையத்தில் நடைபெற்ற வருங்கால மாநாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய பிரதமா் மோடி, ‘உலக அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கு சா்வதேச அமைப்புகளில் சீா்திருத்தம் அவசியம்’ என்று வலியுறுத்தியிருந்தார்.

மேலும், பிரதமர் மோடி, நியூயார்க்கில் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து அமைதியை கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை மீண்டும் வெளிப்படுத்தியிருந்தார்.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 2022, பிப்ரவரி 24 ஆம் தேதியில் தொடங்கிய போர், இன்று வரை முடிவு பெறாமல் தீராப் பிரச்னையாக இருந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

கூலி டிரெய்லர்!

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

SCROLL FOR NEXT