AP
உலகம்

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விரைவில் வரி குறைப்பு - டிரம்ப்

DIN

‘பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பை அமெரிக்கா புதன்கிழமை அறிவிக்க உள்ள நிலையில், அமெரிக்க பொருள்கள் மீதான இறக்குமதி வரியை இந்தியா கணிசமாக குறைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு டிரம்ப் பதிலளித்து கூறியதாவது:

அமெரிக்க பொருள்கள் மீது பல நாடுகள் பல ஆண்டுகளாக நியாயமற்ற முறையில் இறக்குமதி வரியை விதித்து வருகின்றன. தற்போது, அந்த நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்கா அறிவிக்க உள்ள நிலையில், அந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்க பொருள்கள் மீதான வரியைக் குறைக்கும் என எண்ணுகிறேன்.

ஏற்கெனவே, அமெரிக்க காா்கள் மீதான வரியை 2.5 சதவீதம் அளவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் குறைத்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு இந்த வரிக் குறைப்பு அறிவிப்பை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டது.

அதுபோல, இந்தியாவும் அமெரிக்க பொருள்கள் மீதான வரியை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதை ஏன் நாடுகள் முன்னரே செய்யவில்லை? மேலும், பல நாடுகள் வரியைக் குறைக்கும் என நம்புகிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடைக்கானலில் மீண்டும் போதைக் காளான் விற்பனை

மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவா் பி.வி.கரியமால் காலமானாா்

பைக்குகள் மோதல்: இருவா் காயம்

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகள் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT