முகப்பு
உலகம்

உடல்நிலை தேறிய பின் முதல்முறையாக மக்களைச் சந்தித்தார் போப் பிரான்சிஸ்!

உடல்நிலை தேறிய பின் முதல்முறையாக பொதுவெளியில் போப் பிரான்சிஸ்...

Updated On : 20 ஏப்ரல், 2025 at 12:57 PM
- AP | வாடிகன்
பகிர்:

ரோம்: உடல்நிலை தேறிய பின் பொதுவெளியில் முதல்முறையாக போப் பிரான்சிஸ் மக்களை சந்தித்தார்.

நிமோனியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ்(88) கடந்த மார்ச் 23-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வாடிகன் திரும்பினார். இந்த நிலையில், புனித பீட்டர் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) நடைபெற்ற திருப்பலி நிகழ்ச்சியில் திரண்டிருந்த மக்களை போப் பிரான்சிஸ் சந்தித்தார்.

சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்திருந்த போப் பிரான்சிஸைப் பார்த்ததும் மக்கள் மகிழ்ச்சியடைந்ததை காண முடிந்தது. அவர் இயல்பாக சுவாசிக்க சிரமப்படுவதால் மூக்கின் வழியாக குழாய் பொருத்தப்பட்டு செயற்கையாக ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், அவர் சிரமத்தை பொருட்படுத்தாது மெல்லிய குரலில் மக்களிடம் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.