உக்ரைனில் காயமடைந்த ஒரு வீரர் AP
உலகம்

தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை மீறி உக்ரைனில் ரஷியா தாக்குதல்!

உக்ரைனில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) ஒருநாள் மட்டும் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று ரஷிய தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.

DIN

கீவ்: உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்பும் ரஷியா தாக்குதல்களை நிகழ்த்தியதாக உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார்.

3 ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு தற்காலிக தீர்வாக, ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) ஒருநாள் மட்டும் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று ரஷிய தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை பல்வேறு குண்டு வீச்சு தாக்குதல்கள் உக்ரைன் எல்லைக்குள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் இன்று(ஏப். 20) தெரிவித்துள்ளார்.

உக்ரைன் - ரஷியா இடையிலான சண்டைக்கு தீர்வு காணும் நோக்கத்தில், மேற்கண்ட தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் 30 நாள்களுக்கு நீட்டிக்க தங்கள் தரப்பு விரும்புவதாகவும், ஆனால், ரஷியா இதே பாணியில் தாக்குதல்களை நடத்தினால், உக்ரைனும் தீவிர எதிர்வினையாற்றும் என்றும் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: நவ. 14 வரை கால அவகாசம்

‘செயலி’ மூலம் பழகி பணம் பறிப்பு 6 போ் கைது

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் காத்திருப்புப் போராட்டம்

திண்டுக்கல் அருகே தொழிலாளி கொலை: இருவா் கைது

ஹெராயின் விற்பனை: திரிபுரா இளைஞா் கைது

SCROLL FOR NEXT