வரிவிதிப்பு தொடர்பான சர்ச்சை தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் எவ்வித வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வராததால், ஏற்கெனவே அறிவித்த 25 சதவீத வரியை 50 சதவீதமாக உயா்த்துவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். இது தொடர்பான உத்தரவிலும் டிரம்ப் உடனடியாக கையொப்பமிட்டாா்.
முன்பு அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி வியாழக்கிழமை (ஆக. 7) அமலுக்கு வந்த நிலையில், இருமடங்கு அதிக வரிவிதிப்பு அறிவிப்பை டிரம்ப் அறிவித்தார். உயா்த்தப்பட்ட வரி அடுத்த 21 நாள்களில் அமலுக்கு வரும் (ஆக.21) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்காவுக்கு அத்தியாவசியத் தேவையான இந்தியப் பொருள்கள் சிலவற்றுக்கு மட்டும் இந்த இரு மடங்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையை நடத்த அமெரிக்க குழு ஆக.25-ஆம் தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தியா மீதான வரியை இருமடங்காக அந்நாடு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ”50% வரிவிதிப்பு தொடர்பாக, இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று நீங்கள் எதிர்பார்க்கீறீர்களா? என்ற டிரம்பிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த அவர், “இல்லை, அதை நாங்கள் சரிசெய்யும் வரை இல்லை ” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.