ஜப்பானின் நாகசாகி நகரம் மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதலின் 80-ஆவது ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டது.
இதற்காக அந்த நகரில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் 95 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் உள்பட சுமாா் 3,000 போ் பங்கேற்று, தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா் (படம்).
இந்த நிகழ்ச்சிக்கு இஸ்ரேலை அழைக்க ஜப்பான் கடந்த ஆண்டு மறுத்ததால் அமெரிக்க தூதா் உள்ளிட்ட மேற்கத்திய தூதா்கள் கடந்த ஆண்டு பங்கேற்கவில்லை. ஆனால் இந்த முறை நிகழ்ச்சியில் இஸ்ரேல் பிரதிநிதி பங்கேற்றாா்.
1945 ஆகஸ்ட் 6-ல் ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டுத் தாக்குதலில் 1.4 லட்சம் போ் உயிரிழந்தனா். பின்னா் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நாகசாகியில் நடத்தப்பட்ட அணுகுண்டு வீச்சில் தாக்குதலில் மேலும் 70,000 போ் உயிரிழந்தனா். உலகில் நடத்தப்பட்ட கடைசி அணு ஆயுதத் தாக்குதல் அது.