சுலைமான் அல்-ஒபெய்டு, முகமது சாலா படங்கள்: எக்ஸ் / யுஇஎஃப்ஏ, யூமுகமது சாலா.
உலகம்

பாலஸ்தீன பீலே கொலை..! யுஇஎஃப்ஏவை விமர்சித்த சாலா!

பாலஸ்தீன பீலே எனப்படும் கால்பந்து வீரரின் இறப்பு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பாலஸ்தீன பீலே எனப்படும் கால்பந்து வீரர் சுலைமான் அல்-ஒபெய்டு இஸ்ரேலிய தாக்குதலில் பலியானதுக்கு பதிவிட்ட யுஇஎஃப்ஏவை பிரபல கால்பந்து வீரர் முகமது சாலா விமர்சித்துள்ளார்.

தெற்கு காஸாவில் மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த மக்களை இஸ்ரேலியப் படைகள் குறிவைத்து நடத்திய தாக்குதலில், கடந்த புதன்கிழமை 41 வயதான சுலைமான் அல்-ஒபெய்டு கொல்லப்பட்டதாக பாலஸ்தீன கால்பந்து சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

பசி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், மே மாத இறுதியில் இருந்து உணவு உதவிபெற முயன்ற 1,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேலியப் படைகள் கொன்றதாக ஐ.நா. கடந்த மாதம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதற்காக, யுஇஎஃப்ஏ சுலைமானுக்கு இறங்கல் பதிவிட்டிருந்தது. அதில் கூறியிருந்ததாவது:

'பாலஸ்தீன பீலே' சுலைமான் அல்-ஒபெய்டுக்கு பிரியா விடை. நெருக்கடியான காலங்களிலும்கூட எண்ணற்ற குழந்தைகளுக்கு நம்பிக்கை அளித்த திறமைசாலி எனக் குறிப்பிட்டிருந்தது.

இதனை தனது எக்ஸ் பக்கத்தில் ரீஷேர் செய்து முகமது சாலா, “அவர் எப்படி, எங்கு, எதனால் இறந்தார் என்று எங்களுக்குக் கூற முடியுமா?” எனப் பதிவிட்டுள்ளார்.

இது உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டுள்ளது. கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பல நாடுகளில் இது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.

எகிபதிய அரசன் என அழைக்கப்படும் முகமது சாலா லிவர்பூல் அணிக்காக சிறப்பாக விளையாடியதால் இந்தாண்டின் பேலந்தோர் விருதுக்கான பட்டியலில் தேர்வாகியுள்ளார்.

famous footballer Mohamed Salah has criticized UEFA for its post on the death of Palestinian footballer Suleiman Al-Obeid, known as the "Pele of Palestine", in an Israeli attack.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி!

மறுவெளியீடாகும் நாயகன்!

விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் துயரம் நேரிட்டிருக்காது: செந்தில் பாலாஜி!

ஓடிடியில் வெளியானது மதராஸி!

இரண்டு நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT