காஸாவில் சண்டை நிறுத்தம் ஏற்பட முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் தரப்பால் திங்கள்கிழமை இரவில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக, இஸ்ரேல் தரப்பின் பதிலுக்காக காத்திருக்கிறது.
காஸாவில் ‘60 நாள் சண்டை நிறுத்தம்’ என்ற முன்மொழிவுக்கு இப்போது ஹமாஸ் தரப்பு சம்மதம் தெரிவித்திருப்பதை மத்தியஸ்தம் செய்யும் முதன்மை நாடான கத்தார் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்னொருபுறம், இஸ்ரேல் படைகள் காஸாவில் வான் வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்த நிலையில், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) ஒரேநாளில் மட்டும் 40 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.