பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், வெள்ளத்தில் சிக்கி சுமார் 22 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கிழக்குப் பகுதிகளில் உள்ள சட்லெஜ், ரவி, செனாப் ஆகிய நதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பஞ்சாப் மாகாணத்தின் லாஹூர் நகரத்தில் உள்ள 9 முக்கிய குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 1,700 கிராமங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பஞ்சாபில் மழை மற்றும் வெள்ளத்தினால் தற்போது வரை 22 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏராளமான முக்கிய கட்டமைப்புகள் முழுவதுமாகச் சேதமாகியுள்ள நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் ரவி நதியின் மீது அமைந்துள்ள அணையானது திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. இதனால், பஞ்சாப் மாகாணத்தின் 8 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை மீட்க பாகிஸ்தான் ராணுவம் களமிறக்கப்பட்டது.
ஆனால், அணையைத் திறக்கும் முன்னர் இந்திய அரசு, பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: செய்யறிவுத் துறைக்குள் நுழைவது எப்படி? ரூ.3.36 கோடி சம்பளத்தை மறுத்த இளைஞர் பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.