இலங்கையில், குற்ற வழக்குகளில் தேடப்பட்ட 2 முக்கிய அரசியல் தலைவர்கள் நீதிமன்றத்தில் சரண்டைந்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் முன்னாள் மீன்வளத் துறை அமைச்சரான மூத்த அரசியல் தலைவர் சேனாரத்ன மீது, கடந்த 2013 ஆம் ஆண்டு கொரிய நிறுவனம் ஒன்றுக்கு அவர் வழங்கிய மணல் அள்ளும் ஒப்பந்ததினால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இதேபோல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், புத்த துறவியுமான அதுரலியே ரத்தன கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மற்றொரு புத்த துறவியான வெடினிகாமா விமலாதிஸ்ஸா என்பவரைக் கடத்தி சில முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட வற்புறுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், தேடப்பட்டு வந்த அவர்கள் இருவரின் மீதான வழக்குகளின் விசாரணை நடைபெறும் நீதிமன்றங்களில் இன்று (ஆக.29) அவர்கள் சரணடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சேனாரத்னவை வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வரையிலும், அதுரலியே ரத்தனவை செப்டம்பர் 12 ஆம் தேதி வரையிலும் சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.
முன்னதாக, அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க, கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், பிணையில் அவர் விடுதலைச் செய்யப்பட்டபோதும், இலங்கையின் முன்னாள் அதிபர் ஒருவர் குற்றவழக்கில் கைது செய்யப்பட்டது அதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜூலையில் மட்டும்.. 47 நாடுகளில் 4,000 குரங்கு அம்மை பாதிப்புகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.