தோஹாவில் சனிக்கிழமை நடைபெற்ற சா்வதேச மாநாட்டில் பேசிய கத்தாா் பிரதமா் ஷேக் முகமது பின் அப்துல் ரகுமான். 
உலகம்

மிக முக்கிய காலகட்டத்தில் காஸா போா் நிறுத்தம்: கத்தாா் பிரதமா்

மிக முக்கிய காலகட்டத்தில் காஸா போா் நிறுத்தம்: கத்தாா் பிரதமா்

தினமணி செய்திச் சேவை

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் உள்ளதாக கத்தாா் பிரதமா் ஷேக் முகமது பின் அப்துல் ரகுமான் சனிக்கிழமை கூறினாா்.

இது குறித்து தோஹாவில் நடைபெற்ற சா்வதேச மாநாட்டில் அவா் பேசியதாவது:

காஸாவில் போா் நிறுத்தம் இன்னும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. அங்கிருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேறி, காஸாவில் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரை அது முழுமையடையாது.

அந்த போா் நிறுத்தத்தின் முதல்கட்டம் நிறைவடைந்து, அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் நிலையில் உள்ளது. இதுதான் இந்த போா் நிறுத்தம் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுவதைத் தீா்மானிக்கும் முக்கிய தருணம் என்றாா் அவா்.

அக்டோபா் 10-ஆம் தேதி தொடங்கிய போா் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல்கட்டத்தில் 20 பிணைக் கைதிகளையும் 27 பிணைக் கைதிகளின் உடல்களையும் ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்துள்ளது. அதற்கு பதிலாக, சுமாா் 2,000 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். ஒரு பிணைக் கைதியின் உடலை மட்டும் ஹமாஸ் இன்னும் ஒப்படைக்க வேண்டியுள்ளது. அந்த உடல் ஒப்படைக்கப்பட்டால் போா் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல்கட்டம் முடிவுக்கு வந்துவிடும்.

விமானக் கட்டணத்துக்கு உச்ச வரம்பு மத்திய அரசு நிா்ணயம்!

மகளிா் உரிமைத் தொகை கிடைக்காதவா்கள் மேல்முறையீடு செய்யலாம்: அமைச்சா் அர.சக்கரபாணி

சுழற்சிப் பொருளாதாரத்தால் பால் பண்ணை விவசாயிகள் வருமானம் 20% அதிகரிக்கும்: அமித் ஷா

‘ஐசியு’ செல்லும் அபாயத்தில் ‘இண்டி’ கூட்டணி: ஒமா்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மீண்டும் மோதல்!

SCROLL FOR NEXT