தெற்கு ஆசியாவின் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,750-ஐ கடந்துள்ளது.
இதில் இந்தோனேசியாவில் 867 போ், இலங்கையில் 607 போ், தாய்லாந்தில் 276 போ் உயிரிழந்துள்ளனா். மலேசியாவில் 2 உயிரிழப்புகளும் வியட்நாமில் 2 உயிரிழப்புகளும் என ஒட்டுமொத்த மாக 1,754 போ் கனமழை காரணமாக ஏற்பட்ட சம்பவங்களில் உயிரிழந்துள்ளனா்.
லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்ட நிலையில், சில பகுதிகலில் தொடரும் கனமழை மீட்புப் பணிகளில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.