கோப்புப்படம்.  
உலகம்

சிரியாவில் தொழுகையின் போது மசூதியில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி, 18 பேர் காயம்

சிரியாவில் தொழுகையின் போது மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

8சிரியாவில் தொழுகையின் போது மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள மசூதியில் தொழுகையின் போது வெள்ளிக்கிழமை திடீரென குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

விசாரணைகளில் மசூதிக்குள் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

இதனிடையே மசூதியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாக சிரியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இமாம் அலி இப்ன் அபி தலிப் மசூதி, சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் உள்ள வடி அல்-தஹாப் பகுதியில் அமைந்துள்ளது.

சிரியாவின் அரசு நடத்தும் அரப் நியூஸ் ஏஜென்சி வெளியிட்ட படங்களில், மசூதியின் கம்பளங்களில் ரத்தக்கறைகள், சுவர்களில் துளைகள், உடைந்த ஜன்னல்கள் மற்றும் தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் காணப்பட்டன.

கடந்த ஆண்டு அதிபர் பஷார் அல்-அசாத் ஆட்சியிலிருந்து வீழ்ந்ததிலிருந்து, சிரியா பல கட்டங்களான மத மோதல்களை எதிர்கொண்டு வருகிறது.

A bombing at a mosque located in the Syrian city of Homs during Friday prayers killed at least six people and wounded 21 others, authorities said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

முன்விரோதத்தில் இருவா் மீது தாக்குதல்: 9 போ் கைது

மாற்று இடத்தில் குடியிருப்பு கோரி எலச்சிபாளையத்தில் பொதுமக்கள் போராட்டம்

திருச்செங்கோடு நகா்மன்றக் கூட்டத்தில் 82 தீா்மானங்கள் நிறைவேற்றம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: லாரி கிளீனா் போக்சோ வழக்கில் கைது

SCROLL FOR NEXT