இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (கோப்புப் படம்) 
உலகம்

சோமாலிலாந்தை அங்கீகரித்த இஸ்ரேல்! ஆப்பிரிக்க ஒன்றியம் கண்டனம்!

சோமாலிலாந்தை தனிநாடாக இஸ்ரேல் அங்கீகரித்ததற்கு வலுக்கும் கண்டனம்...

இணையதளச் செய்திப் பிரிவு

சோமாலிலாந்தை தனிநாடாக இஸ்ரேல் அரசு அங்கீகரித்ததற்கு, பல்வேறு ஆப்பிரிக்க அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் இருந்து பிரிவிணைவாதக் குழுவினரால் பிரிக்கப்பட்ட சிறிய நிலப்பகுதி கடந்த 1991 ஆம் ஆண்டு, சோமாலிலாந்து எனும் சுதந்திரம் பெற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. இந்த நாட்டை மற்ற சர்வதேச நாடுகள் இறையாண்மை பெற்ற தனிநாடாக அங்கீகரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சோமாலிலாந்தை முதல்முறையாக, கடந்த டிச.26 ஆம் தேதி இஸ்ரேல் அரசு தனிநாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தது. இதனால், இஸ்ரேல் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆப்பிரிக்க ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர் மஹ்மூத் அலி யூசூஃப் கூறியதாவது:

“சோமாலிலாந்தை தனிநாடாக அங்கீகரிக்கும் முயற்சிகள் அனைத்தையும் நாங்கள் கடுமையாக நிராகரிக்கின்றோம். சோமாலிலாந்து என்றும் சோமாலியா நாட்டின் மிக முக்கியமான பகுதியாகவே இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், சோமாலிலாந்தை தனிநாடாக அங்கீகரித்தது சட்டவிரோதமானச் செயல் என்று கூறிய சோமாலியா அரசு, பதிலுக்கு இஸ்ரேல் என்ன எதிர்பார்த்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது எனத் தெரியவில்லை எனவும் விமர்சித்துள்ளது.

முன்னதாக, காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களை அங்கிருந்து வெளியேற்றி தங்கவைப்பதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் அதிகாரிகள் சோமாலிலாந்து அரசை அனுகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு19 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! கேப்டன் யார் தெரியுமா?

‘சேலம் பொதுக்குழு தீா்மானங்கள் பாமகவை கட்டுப்படுத்தாது’

சல்மான் கானை நேரில் வாழ்த்திய தோனி! நள்ளிரவில் சுவாரசியம்!

கரை ஒதுங்கிய ராக்கெட் போன்ற மர்மப் பொருள்! தீவிர சோதனையில் வெடிகுண்டு நிபுணர்கள்!

2025! காஸா முதல் காஷ்மீர் வரை... உலகம் போர்க்களமான கதை!

SCROLL FOR NEXT