வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் டாக்காவில் செவ்வாய்க்கிழமை (டிச.30) காலமானார். அவருக்கு வயது 80.
வங்கதேச முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசியக் கட்சித் தலைவருமான கலீதா ஜியா உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு காலமானதாக வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) அறிக்கை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா, நீண்டநாள் உடல்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த நவம்பர் 23 ஆம் தேதி தலைநகர் டாக்காவில் எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
கலீதா ஜியாவுக்கு சுவாசப் பிரச்சினை அதிகரித்து, உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தது, அதையடுத்து நுரையீரல் மற்றும் முக்கிய உறுப்புகளுக்கு ஓய்வு அளிக்கும் நோக்கில் அவர் வென்டிலேட்டர் உதவியுடன் நீண்டநாள்களாக கவலைக்கிடமான நிலையில் இருந்து வந்தார்.
சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்ததால் தொடர்ந்து டயாலிசிஸ் செய்யப்பட்டு, அவருக்கு இதயக் குழாயிலும் பிரச்னை கண்டுபிடிக்கப்பட்டது. டிச. 11 அன்று அவருக்கு வென்டிலேட்டரில் சுவாசத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
திங்கள்கிழமை இரவு முதல் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அதிநவீன சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்துச் செல்ல கத்தாரில் இருந்து ஒரு சிறப்பு விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டது. ஆனால், எவர்கேர் மருத்துவமனையில் இருந்து டாக்கா விமான நிலையத்திற்கு மாற்றுவதற்கு மருத்துவ வாரியம் அனுமதி வழங்கவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.