மாலி மற்றும் புர்கினா ஃபஸோ: அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலடியாக மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய நாடுகளின் அரசுகள் அமெரிக்கர்கள் மீது பயணத் தடை விதித்துள்ளன.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி மற்றும் புர்கினா ஃபஸோ உள்பட 20-க்கும் அதிகமான நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதித்து கடந்த டிச.16 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், அதிபர் டிரம்ப் விதித்த உத்தரவுக்கு பரஸ்பர நடவடிக்கையாக, மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தங்களது நாடுகளுக்குள் அமெரிக்கர்கள் நுழைய அனுமதி இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மாலியின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரஸ்பர கொள்கைகளின் அடிப்படையில் மாலி குடிமக்களின் மீது விதிக்கப்பட்டுள்ள அதே தடைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் அமெரிக்கக் குடிமக்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், புர்கினா ஃபஸோவின் வெளியுறவு அமைச்சர் கராமகோ ஜீன் - மேரி தரோரே கையெழுத்திட்ட அறிக்கையில், அமெரிக்கக் குடிமக்கள் மீது தடை விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சி அமைந்த மாலி மற்றும் புர்கினா ஃபஸோ அரசுகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.