காஸாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்ட மருத்துவர்களை இஸ்ரேல் ராணுவம் துன்புறுத்துவதாக அவர்களின் வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
போரின்போது முதலுதவிப் பணிகளில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களை சட்டவிரோதமாக பிணைக் கைதிகளாக சிறைபிடித்துச் சென்றதோடு மட்டுமல்லாமல், அவர்களை தங்கள் நிலைகளில் வைத்து துன்புறுத்துவதாக காஸா வழக்குரைஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட மருத்துவர்களை சந்தித்தப் பிறகு அவர்களின் வழக்குரைஞர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட வடக்கு காஸாவின் கமல் அத்வான் மருத்துவமனையின் மருத்துவர் ஹுசாம் அபு சாஃபியாவின் வழக்குரைஞர் இது குறித்து பேசியதாவது,
இஸ்ரேல் ராணுவத்தால் தனிச்சையாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தபோது மருத்துவர் சாஃபியா, உடல் ரீதியாக துன்புறுத்தல்களை அனுபவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அல்மெய்சான் மனித உரிமைகள் மையத்தின் உதவியுடன் சிறைபிடிக்கப்பட்ட மருத்துவர், முதல்முறையாக தனது வழக்குரைஞரை மட்டும் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது தனது வழக்குரைஞரிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.