கோப்புப்படம் 
உலகம்

செர்னோபிள் அணு உலை கதிர்வீச்சுத் தடுப்புக் கட்டமைப்பு மீது ரஷியா தாக்குதல்

செர்னோபிள் அணு உலை மீது ஏற்படுத்தப்பட்டிருந்த கதிர்வீச்சுத் தடுப்புக் கட்டமைப்பு மீது ரஷியா தாக்குதல் நடத்தியிருக்கிறது.

DIN

செர்னோபிள் பகுதியில் விபத்துக்குள்ளான நான்காம் அணு உலை மீது, அமைக்கப்பட்ட கதிர்வீச்சு தடுப்புக் கட்டமைப்பு மீது ரஷியா வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் அப்பகுதியில் தீப்பற்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணு உலை கதிர்வீச்சு தடுப்புக் கட்டமைப்பு மீதான ரஷியாவின் தாக்குதலுக்கும், அணு கதிர்வீச்சு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் உலக நாடுகள் கண்டனமும் எச்சரிக்கையும் விடுத்துள்ளன.

கடந்த 1986-ல் செர்னோபிள் அணு உலை வெடித்த விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அணு சக்தி அமைப்பு இது குறித்துக் கூறுகையில், புதிதாக அமைக்கப்பட்ட கதிர்வீச்சி தடுப்பு கட்டமைப்பு மீது இரவு முழுவதும் வெடிகுண்டுகள் விழுந்த சப்தம் கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த அணுக்கதிர்வீச்சு தடுப்புக் கட்டமைப்பானது விபத்து நேரிட்ட நான்காவது அணு உலையின் மிச்சங்களை பாதுகாக்கும் மற்றும் கதிர்வீச்சுப் பரவாமல் தடுக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. வெடிகுண்டு தாக்குதலில் அங்கு தீப்பற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரப்பெற்றோம் (24.11.2025)

கரூர் சம்பவம்: சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தோல்வி..! சோகத்தில் ரசிகர்கள்!

ரஜினி 173 - இயக்குநரும் கதையும்?

அழகென்ற சொல்லுக்கு... மஹானா சஞ்ஜீவி!

SCROLL FOR NEXT