FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இந்தியாவுக்கு நிகரான அதிக வரியை அமெரிக்காவும் விதிக்கும்! டிரம்ப் எச்சரிக்கை

இந்தியா விதிக்கும் வரிக்கு நிகரான வரியை நாங்களும் விதிப்போம் என்று டிரம்ப் அறிவிப்பு.

Updated On : 14 பிப்ரவரி 2025, 8:50 am IST
டொனால்டு டிரம்ப்
பகிர்:

இந்தியா அதிகமான வரி வசூலிப்பதாகவும், இனி நிகரான வரியை அமெரிக்காவும் வசூலிக்கும் என்றும் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, கனடா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக வரி வசூலிக்கப்படும் என்று அச்சுறுத்தி வருகின்றார். மேலும், வரி தொடர்பான பல உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்திப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அமெரிக்க பொருள்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் அதே அளவிலான வரியை அமெரிக்காவும் விதிக்கும் வகையிலான அரசாணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

Advertisement

Advertisement

அப்போது டிரம்ப் பேசியதாவது:

எதிரி நாடுகளைவிட நட்பு நாடுகள்தான் எங்களை அதிகம் பாதிக்கிறது. அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் பல சிறிய நாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியா அதிகளவிலான வரியை விதிக்கின்றது.

அதிக வரியின் காரணமாக ஹார்லி டேவிட்சன் பைக்குகளை இந்தியாவில் விற்க முடிவதில்லை. இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது கட்டாயமாக்கப்படுகிறது. இதேதான் டெஸ்லாவுக்கும் நடக்கிறது.

அதனால், பிற நாடுகள் விதிக்கும் அதே அளவிலான வரியை இனி அமெரிக்காவும் அந்த நாடுகளின் பொருள்களுக்கும் விதிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments