உலகம்

சீன ஹேக்கர் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 85 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

சீன ஹேக்கர் பற்றி தகவல் கொடுத்தால் 1 கோடி டாலர் (ரூ. 85 கோடி) பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவிப்பு

DIN

பொதுமக்களுக்கு மிகவும் ஆபத்தான சைபர் தாக்குதலுடன் தொடர்புடைய சீன ஹேக்கர் பற்றி தகவல் கொடுத்தால் 1 கோடி டாலர் (ரூ. 85 கோடி) வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க நிதியமைச்சகத் துறை அதிகாரிகள் இது பற்றி கூறுகையில், இந்த சைபர் தாக்குதல் மூலம் ஏராளமான மக்களைக் கொன்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரிக்க அமெரிக்கா ஒரு சீன சைபர் செக்யூரிட்டி நிறுவனத்துக்கும் அனுமதி வழங்கியிருக்கிறது.

செங்டுவை தளமாகக் கொண்ட சிச்சுவான் சைலன்ஸ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நிறுவனமும் அதன் ஊழியர்களில் ஒருவரான குவான் தியான்ஃபெங்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலகளவில் ஆயிரக்கணக்கான நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வந்த 80,000க்கும் மேற்பட்ட ஃபயர்வால்களை பாதிக்கச் செய்யக்கூடிய மென்பொருளைப் பயன்படுத்தியதாக அமெரிக்க கருவூலத் துறை செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், அந்த நிறுவனம் அல்லது குவான் தியான்ஃபெங் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்தோ, ஹேக்கிங் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை அளித்தாலோ 1 கோடி டாலர் (ரூ. 85 கோடி) பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க அறிவிப்பு

இந்த தகவல் திருட்டு மென்பொருளானது, கணினிகளிலிருந்து வெறும் தகவல்களை திருடுவது மட்டுமல்லாமல், அவற்றின் உரிமையாளர் பயன்படுத்த முடியாத வகையில் முடக்கி, அதனைக் கொண்டு பேரம் பேசுவது போன்ற மோசடிகளில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மூன்று டஜன் ஃபயர்வால்கள், இந்த முன்னணி உள்கட்டமைப்பு நிறுவனங்களின் கணினிகளை மிக உறுதியோடு பாதுகாத்து வருவதாகவும், ஒருவேளை, சைபர் தாக்குதல் இதன் மூலம் தடுக்கப்படாமலோ அல்லது குறைக்கப்படாமலோ இருந்திருந்தால், அதன் தாக்கம் என்பது மிகக் கடுமையான பாதிப்பு, மனிதர்கள் காயமடைவது அல்லது உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அறிக்கை கூறுகிறது.

அதாவது, சில முன்னணி எரிசக்தி நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதலின்போது, நிறுவனங்கள், எண்ணெய் துரப்பனப் பணிகளில் தீவிரமாக இயங்கி வந்தன. ஒருவேளை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் மிகப்பெரிய சேதங்களை, உயிர் பலிகளை ஏற்படுத்தியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? Idly Kadai - திரை விமர்சனம் | Dhanush | Arun Vijay

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

SCROLL FOR NEXT