கோப்புப் படம் AP
உலகம்

அமெரிக்கா: கூட்டத்திற்குள் நுழைந்த கார்! 10 பேர் பலி - புத்தாண்டில் தீவிரவாத தாக்குதல்?

தெற்கு அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கூட்டத்திற்குள் கார் நுழைந்த விபத்தில் 10 பேர் பலியாகினர்.

DIN

தெற்கு அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கூட்டத்திற்குள் கார் நுழைந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த நியூ ஓர்லென்ஸ் நகர மேயர் இதனை தீவிரவாதத் தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதில் தீவிரவாத தாக்குதலுக்கான நோக்கம் இல்லை என எஃப்பிஐ தெரிவித்துள்ளது.

தெற்கு அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திலுள்ள நியூ ஓர்லென்ஸ் நகரத்தின் போர்பன் சாலையில் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அதிகாலை 3.15 மணியளவில், நடைமேடையில் இருந்த மக்களை இடித்தவாறு கூட்டத்திற்குள் நுழைந்த கார், சாலையில் இருந்தவர்கள் மீது மோதியது.

காரில் இருந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்த நிலையில், காவல் துறையினரும் உடனடியாக பதில் தாக்குதல் கொடுத்தனர். மக்கள் மீது மோதிய பிறகு ஓடும் காரின் கதவைத் திறந்து குதித்த நபர், காவல் துறையை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே தப்பிச்சென்றார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில், எதிர்பாராத விதமாக நடந்த இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயங்களுடன் நோயிம்ஸ் உள்ளிட்ட 5 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த போர்பன் சாலையில் அதிகாரிகள் விசாரணை

இது தொடர்பாக காவல் துறை தலைமை அதிகாரி தெரிவித்ததாவது,

''மக்கள் மீது கொடூரத் தாக்குதலை நடத்திய குற்றவாளி காரில் இருந்தவாறே பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். காவலர்களும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தி பிடிக்க முயன்றனர். குற்றவாளி சுட்டதில் இரு அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடல்நிலை சீராக உள்ளது.

படுகொலைகளை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இதனைத் தீவிவாத தாக்குதலாக அணுகவில்லை. விபத்து ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே வாகனத்தை குற்றவாளி இயக்கியுள்ளார் எனக் கூறினார்.

எனினும் விபத்து குறித்து பேசிய நியூ ஓர்லென்ஸ் நகர மேயர் இதனைத் தீவிரவாதத் தாக்குதல் எனக் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் புலன் விசாரணை அமைப்பின் தகவலின்படியும், இது தீவிரவாத தாக்குதல் இல்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சீன ஹேக்கர் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 85 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT