AP
உலகம்

காஸாவில் போர்நிறுத்தம்! இஸ்ரேல், ஹமாஸ் இடையே உடன்படிக்கை!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறதா?

DIN

மத்திய கிழக்கு பகுதியான காஸாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்து வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஹமாஸ் படையும் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதப் படைக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(ஜன. 12) இரவு நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் காஸா விவகாரத்தில் தீர்வை நோக்கி இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஸாவில் ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும், இஸ்ரேல் படைகள் காஸாவிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் ஆகிய இவ்விரு விவாதங்களும் அமைதிப் பேச்சுவார்த்தையில் மையப் புள்ளிகளாக உள்ளன.

காஸாவில் போர்நிறுத்தம் தொடர்பான இறுதி வரைவு அறிக்கை இஸ்ரேல், ஹமாஸிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி வரைவு அறிக்கையை ஹமாஸ் தரப்பு ஏற்றுக் கொண்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) தெரிவித்தனர்.

போர்நிறுத்த நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் இறுதி வரைவு அறிக்கையை ஹமாஸ் தரப்பு ஏற்றுக் கொண்டிருப்பதாக எழுத்துப்பூர்வமாக ஹமாஸ் தரப்பு ஒப்புதல் அளித்து அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகச் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கவும் ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாக இவ்விவகாரத்தை அறிந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதில் மேற்கோள் காட்டியிருப்பதன்படி, முதல்கட்டமாக 33 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தரப்பு தீர்மானித்துள்ளது. அவர்களுள் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் முதலில் விடுவிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னொருபுறம், இஸ்ரேலில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க ஹமாஸ் கோரியுள்ளது.

எனினும், இஸ்ரேல் தரப்பு இந்த வரைவு அறிக்கைக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் ஆலோசித்து வந்த நிலையில், இஸ்ரேல் தரப்பும் இந்த வரைவு அறிக்கையை ஏற்றுகொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவிருக்கும் ஜன. 20-ஆம் தேதிக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும், இதுகுறித்த முழு தகவல் விரைவில் வெளியாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், காஸாவில் மக்கள் பொது வெளியில் திரண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT