அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப், நாளை (ஜன. 20) பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில், 'டிரம்ப்பிசத்தை' எதிர்ப்பதாகக் கூறி, தலைநகர் வாஷிங்டனில் 3 வெவ்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர், பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காலநிலை மாற்றம், குடியேற்றம், பெண்கள் உரிமை உள்ளிட்ட காரணங்களுக்காக போராட்டம் நடத்தப்படுவதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்னதாக, 2017 ஆம் ஆண்டிலும் டிரம்ப் பதவியேற்பின்போது, இவ்வாறான போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, அமெரிக்காவில் நிலவும் கடும் குளிரால் டிரம்ப்பின் பதவியேற்பு நிகழ்ச்சி பொதுவெளியில் நடத்த இயலாது என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
40 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக மூடிய திடலுக்குள் நடத்தப்படும் அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியைக் காண, கேபிடல் ஒன் அரினா ஹாக்கி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: அமெரிக்காவில் டிக் டாக் சேவை நிறுத்தம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.