சத்யா நாதெள்ளா  கோப்புப் படம்
உலகம்

இந்தியா-அமெரிக்கா பிணைப்பே என்னை உருவாக்கியது-மைக்ரோசாஃப்ட் தலைவா் சத்யா நாதெள்ளா

இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லவொரு பிணைப்பே என்னை உருவாக்கியது என்று மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா தெரிவித்தாா்.

Din

இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லவொரு பிணைப்பே என்னை உருவாக்கியது என்று மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா தெரிவித்தாா்.

சியாட்டில் நகரில் ஞாயிற்றுக்கிழமை இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதில் அமெரிக்காவில் முக்கிய அரசுப் பதவிகள், பிரபல நிறுவனங்களில் பதவி வகிக்கும் இந்திய வம்சாவளியினா், இந்தியா வம்சாவளி எம்.பி.க்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இந்திய சமூகத்தினா் அமெரிக்காவின் வளா்ச்சிக்கு ஆற்றிய பணிகள் குறித்தும், தேசத்துக்கான அவா்களின் பங்களிப்பு குறித்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் பேசினா். சியாட்டில் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க எம்.பி.க்கள், மாகாண ஆளுநா்கள், அரசியல் தலைவா்கள் சிலரும் கலந்து கொண்டனா். இதில் சத்யா நாதெள்ளா பேசியதாவது:

இரு நாடுகளுக்கும் (இந்தியா-அமெரிக்கா) இடையில் நிலவி வரும் நல்லதொரு பிணைப்பே என்னை உருவாக்கியது. இரு நாடுகளின் தலைமையும் நவீன தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, கல்வித் தரம், மருத்துவம், பொதுமக்களுக்கான சேவைகளை சிறப்பாக வழங்குவது உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன என்றாா்.

வாஷிங்டன் மாகாணத்தின் ஆளுநா் பொ்குஸன், ‘இந்திய சமூகத்தினா் அமெரிக்க மேம்பாட்டுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக மேம்பாட்டுக்கும் பணியாற்றி வருகின்றனா்’ என்றாா்.

தெலங்கானா: அரசு விடுதியில் உணவருந்திய 52 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி

திருவெறும்பூா் ரயில் நிலையம் - பேருந்து நிலையத்துக்கு விரைவில் இணைப்புச் சாலை

தீவிர வறுமை இல்லாத முதல் மாநிலம் கேரளம்: பினராயி விஜயன்

பணகுடி, கூடங்குளத்தில் நவ. 4 இல் மின் தடை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT