துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இரவு விடுதி.  படம் | ஏபி
உலகம்

சிகாகோ இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி!

சிகாகோ இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சிகாகோ இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்தக் கொடூரத் தாக்குதலில் 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மேற்கு சிகாகோ அவென்யூவின் 300-வது பிளாக்கில் உள்ள ஆர்டிஸ் லவுஞ்ச் இரவு விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

அந்த இரவு விடுதியில் ராப்பர் மெல்லோ பக்ஸிற்கான ஆல்ப வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் இருந்து வெளியே வந்தவர்கள் மீது கருப்பு நிற காரில் வந்த சிலர், கண்மூடித்தனமாக சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட நான்கு பேர் பலியானதாக போலீஸார் உறுதிப்படுத்தினர். அவர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

காயமடைந்தவர்களில் இருவர் இல்லினாய்ஸ் மேசோனிக், 2 பேர் மவுண்ட் சினாய் மருத்துவமனைக்கும், 3 பேர் ஸ்ட்ரோகர் மருத்துவமனைக்கும், ஆறு பேர் நார்த்வெஸ்டர்ன் மெமோரியல் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Four people have died from gunshot wounds and 14 others have been hospitalized following a drive-by shooting in Chicago, police said Thursday. At least three were in critical condition.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அத்தி மரத்துக்குக் கீழே இருக்கும் குளுமை..! 19 (1) ஏ நினைவுகளைப் பகிர்ந்த நித்யா மெனன்!

யேமனில் அடிப்படை வசதிகள் வேண்டி மக்கள் போராட்டம்! அரசு அலுவலகம் சிறைப்பிடிப்பு!

விஜயகாந்த் தோல்வியைக் கொண்டாடியவர் வைகோ!- மல்லை சத்யா | MDMK | Mallai Sathya | Vaiko | Vijayakanth

ஆம்ஸ்ட்ராங் இறுதிச்சடங்குக்கு சென்றதுகூட சாதி ரீதியாகப் பார்க்கப்பட்டது! துரை வைகோ பேசியது என்ன? உடைக்கும்  Mallai Sathya

சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை ரத்தாகுமா? மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணை!

SCROLL FOR NEXT