பிரதிப் படம் ENS
உலகம்

ஜப்பானில் நாளை சுனாமி வருகிறதா? கரோனா தொற்றை கூறிய பாபா வங்கா கணிப்பு!

ஜப்பானில் நாளை சுனாமி ஏற்படவிருப்பதாக பிரபல தீர்க்கதரிசி பாபா வங்காவின் கருத்தால் பொதுமக்கள் அச்சம்

இணையதளச் செய்திப் பிரிவு

ஜப்பானில் சுனாமி வரவிருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

புதிய பாபா வங்கா என்றழைக்கப்படும் ரியோ தட்சுகி என்பவர் 1999 ஆம் ஆண்டில் கணித்த சில கணிப்புகள் நிஜமாகவே நிகழ்ந்த நிலையில், அவரை தீர்க்கதரிசியாகவே பலரும் கருதினர். அவரது கணிப்புகளாக வேல்ஸ் இளவரசி டயானாவின் இறப்பு, 2011-ல் ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி, கரோனா தொற்று முதலியவற்றை அவர் கூறியிருந்தார். அவைகளும் ஏதோ ஒரு வகையில் நிகழ்ந்து விட்டன. அதிலிருந்து அவரை சிலர் வழிபட்டும் வருகின்றனர்.

இந்த நிலையில், அவர் 2025, ஜூலை 5 ஆம் தேதியில் ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்படப் போவதாக முன்னரே கணித்திருந்ததால், அந்நாட்டில் பலரும் பதற்றமடைந்துள்ளனர். இருப்பினும், 2025 தொடங்கியதில் இருந்து கணிப்புகளை நிறுத்தி விட்டதாகவும், அவருக்கு காட்சிகள் (தீர்க்கதரிசனம்) எதுவும் தோன்றவில்லை என்றும் கூறினார்.

ஜப்பான் - பிலிப்பைன்ஸ் இடையே கடலுக்கடியில் விரிசல் ஏற்பட்டு, 2011-ல் ஏற்பட்ட சுனாமியைவிட 3 மடங்கு சுனாமியால் உயரமான அலைகள் எழும் என்று அவர் கூறியிருந்ததால், மில்லியன் கணக்கானோர் ஆபத்தில் இருப்பதாக பொதுமக்கள் சிலர் பதற்றமடைந்துள்ளனர்.

தட்சுகியின் கணிப்புகள் தொடர்பான விடியோக்கள், சித்திரிப்பு காட்சிகளும் சமூக ஊடகங்களை ஆட்கொண்டு, நாளை உலகம் அழிந்து விடுவதாகவும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இதனிடையே, புதன்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள டோகாரா தீவுகளில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் ஷின்மோ மலையில் எரிமலை வெடிப்பு ஏற்பட்ட நிலையில், பலரும் பதற்றத்தின் உச்சத்துக்கு சென்றதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பதற்றத்துக்கிடையே, ஜப்பானில் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு சுற்றுலா மேற்கொள்ளவிருந்த ஹாங்காங், சீனா, தாய்லாந்து, வியட்நாம் உள்பட கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பலரும், தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். சுனாமி வதந்திகளால் ஜப்பான் சுற்றுலாத் துறையில் 3.9 பில்லியன் டாலர் (ரூ. 33.2 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் பரவும் வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்த அந்நாட்டு நில அதிர்வு நிபுணர்கள், நிலநடுக்கம் அல்லது சுனாமி ஏற்படுவதற்கான எந்த தரவும் இல்லை என்று கூறுகின்றனர். ஜூலை 5 ஆம் தேதிக்கு, எந்த அதிகாரப்பூர்வ சுனாமி எச்சரிக்கையையும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் விடுக்கவில்லை.

இதனிடையே, பொதுமக்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறும், நிபுணர்களின் அறிவுறுத்தலைக் கேட்குமாறும் தட்சுகி கூறியுள்ளார்.

Japanese Baba Vanga Predicts Tsunami

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே. வங்கத்தில் 2026 பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தம்: புதிதாக 14,000 வாக்குச் சாவடிகள்!

ஆக. 25 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை நிறுத்தம்! - இந்தியா அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிய மரம்! விரைவில் வேறு இடத்துக்கு மாற்றம்!

மும்பையில் எக்ஸ்பிரஸ் ரயில் குப்பைத் தொட்டியில் 4 வயது சிறுவனின் உடல் கண்டெடுப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 10,850 கன அடியாக சரிவு!

SCROLL FOR NEXT