கோப்புப் படம் 
உலகம்

பாகிஸ்தானில் 3 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில், 3 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கைபர் பக்துன்குவா மாகாணத்தின், லக்கி மர்வாத் மாவட்டத்திலுள்ள ஹுராமா கிராமத்தில், இன்று (ஜூலை 4) பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அந்நாட்டின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில், தலிபான் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கொல்லப்பட்ட மூவரும், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த வசீமுல்லா (எ) உமர் கத்தாப், குத்ரத்துல்லா (அ) அபுபக்கர் மற்றும் ஹிஜ்ரத்துல்லா என்பது தெரியவந்துள்ளது.

இத்துடன், அந்த 3 பயங்கரவாதிகளும் வெடிகுண்டு தாக்குதலில் 3 காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களது கூட்டாளிகளைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Three Taliban militants were killed in a military operation carried out by the Counter Terrorism Department in Pakistan's northwestern province.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்

ரூ.12 லட்சத்தில் காரிய மேடை: பணிகள் தொடக்கம்

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

SCROLL FOR NEXT