டிரம்ப் எழுதிய கடிதத்துடன் வெள்ளை மாளிகை செயலர் கரோலின் லியாவிட் AP
உலகம்

மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!

அமெரிக்காவில் வெளிநாட்டு பொருள்களுக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு?

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை தொடங்கிவிட்டார். முதல்கட்டமாக, இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, வங்கதேசம், மியான்மர், இந்தோனேஷியா உள்பட 14 நாடுகளுக்கு திங்கள்கிழமை(ஜூலை 7) கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், அமெரிக்காவில் இறக்குமதியாகும் வெளிநாட்டு பொருள்களுக்கு உச்சபட்சமாக 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பிரதமருக்கு டிரம்ப் எழுதி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “ஆகஸ்ட் 1, 2025 முதல் நாங்கள்(அமெரிக்கா), ஜப்பான் மீது வெறும் 25 சதவீதம் மட்டுமே வரி வசூலிப்போம். அமெரிக்காவுக்கு வரும் அனைத்து ஜப்பானிய பொருள்கள் மீதும் இது பொருந்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடுகள் - வரி விகிதம்

  1. மியான்மர் - 40%

  2. லாவோஸ் - 40%

  3. தாய்லாந்து - 36%

  4. கம்போடியா - 36%

  5. செர்பியா - 35%

  6. வங்கதேசம் - 35%

  7. இந்தோனேசியா - 32%

  1. போஸ்னியா & ஹெர்ஸேகோவ்னிய - 30%

  2. தென்னாப்பிரிக்கா - 30%

  3. தென் கொரியா - 25%

  4. கஸகஸ்தான் - 25%

  5. மலேசியா - 25%

  6. துனீசியா - 25%

  7. ஜப்பான் - 25%

டிரம்ப் இந்தியா உள்ளிட்ட சில முக்கிய நாடுகளுக்கு கடிதம் இன்னும் எழுதவில்லை. பரஸ்பர வரி விதிப்பு விவகாரத்தில், இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒப்பந்தம் இறுதியாவது அமெரிக்காவின் முடிவைப் பொறுத்தே இருக்கிறது.

அதன்பின்னரே, ஆகஸ்ட் 1முதல் அமலாகவுள்ள அமெரிக்காவின் விதிப்பு நடவடிக்கையின்கீழ், இந்திய பொருள்கள் மீதான வரி எவ்வளவு? என்பது உறுதியாக தெரிய வரும்.

Donald Trump releases 14 tariff letters including allies - Full list

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிதி நெருக்கடி காரணமாக தில்லி மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயா்வு

இந்தியா - பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

SCROLL FOR NEXT