இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 
உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை இல்லை.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தோனேசியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 என்ற அளவில் பதிவாகியிருக்கிறது. இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

திங்கள்கிழமை காலை, இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுக்கு அருகே, பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆகப் பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை முற்பகல் 11.20 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம்,, 110 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானதாகவும் ஆனால், இதன் காரணமாக சுனாமி அலைகள் எதுவும் எழும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த பரந்த தீவுக்கூட்ட நாட்டில், ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை முழுவதும் நீண்டு கிடக்கும் டெக்டோனிக் தகடுகள் மோதும் ஒரு தீவிர நில அதிர்வு ஏற்படும் வளைவான பசிபிக் "நெருப்பு வளையத்தின்" அருகே அமைந்திருப்பதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.

  • கடந்த 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக இந்தேோனேசியாவில் 1,70,000 பேர் பலியாகினர்.

  • 2018ஆம் ஆண்டு 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 2,200 பேர் பலியாகினர்.

  • மீண்டும் 2021ஆம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 100 -க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

A powerful earthquake struck Indonesia today, measuring 6.5 on the Richter scale. No tsunami warning has been issued yet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி! தில்லி தீயணைப்புப் படைக்கு ஒரே நாளில் 170 அவசர அழைப்புகள்!

கேரளம் செல்கிறார் குடியரசுத் தலைவர்!

பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் கேப்டன் நீக்கம்! ஷாஹீன் அஃப்ரிடி நியமனம்!

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கர்நாடக அரசு தடை செய்யவில்லை: முதல்வர் சித்தராமையா!

ரூ. 75 ஆயிரம் கோடி! அமெரிக்கா - ஆஸ்திரேலியா இடையே கனிம ஒப்பந்தம்!

SCROLL FOR NEXT